வருவாய்த்துறை தொடர்புடைய குற்ற விசாரணை முறைச்சட்டம்
பிரிவு.107:
ஒரு செயல்துறை நடுவர் தன்னுடைய நிர்வாக எல்லையில் எவரேனும் ஒரு நபர் அல்லது நபர்கள் பொது அனுமதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடும் என்ற தகவல் கிடைக்கப்பெற்றவுடன் இப்பிரிவின் கீழ் நடவடிக்கை தொடர வேண்டும். இப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்குரிய காரணங்கள் இருப்பதாகக் கருதி விட்டால் கடப்பாட்டு ஆவணம் (Bond for Keeping Peace) ஒன்றினை சம்பந்தப்பட்ட நபரிடம் எழுதி வாங்க வேண்டும் அவ்வாறு எழுதி வாங்குவதற்கு முன்பாக காரணம் கேட்கும் குறிப்பாணை ஒன்றினை பிரிவு ஐஐஐ -ன் கீழ் அனுப்ப வேண்டும். மேற்கூறிய ஆவணம் ஒரு ஆண்டிற்கு அதிகப்படாத கால வரம்பிற்குட்பட்டதாக இருக்க வேண்டும்.

வருவாய்த்துறையில்செயல்முறை நடுவர் இந்தப்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தினை உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் தன்னுடைய அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் பொது அமைதியை பாதுகாத்துக் கொள்ளலாம்.

பிரிவு.108:
இந்திய தண்டனைச் சடடத்தின் 124ஏ அல்லது 153 அல்லது 253-பி அல்லது 295-ஏ ஆகிய பிரிவுகளின்படி கண்டிக்கத்தக்க வெளியீடு எதையேனும் பரப்பினாலோ அல்லது அதற்கு முயற்சித்தாலோ இப்பிரிவின் கீழ் செயல்துறை நடுவர் நடவடிக்கை தொடரலாம்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 292-வது பிரிவின்படி ஆபாசமானது என்று கருதக்கூடியவற்றை வெளியிடுகிறார், வைத்திருக்கின்றார், இறக்குமதி ஏற்றமதி செய்கிறார், விற்பனை செய்கிறார் வாடகைக்கு கொடுக்கிறார் அல்லது காட்சிப்பொருளாக வைத்திருக்கிறார் என்றாலோ இப்பிரிவின் கீழ் நடவடிக்கை தொடரலாம்.

நடவடிக்கை தொடருபவர் பிரிவு ஐஐஐ ன் கீழ் காரணம் கேட்கும் குறிப்பாணை ஒன்றினை அனுப்பி ஏழு தினங்களுக்குள் விளக்கம் கோரலாம்.
செய்தித்தாள் பிரிவுச் சட்டத்தின்படி தொகுத்து அச்சிட்டு, வெளியிடும் ஆசிரியர், உரிமையாளர், வெளியீட்டாளர் ஆகியோர் மீது இந்தப்பிரிவின் கீழ் நடவடிக்கைகளை அரசின் அனுமதி பெற்றுத்தான் தொடர வேண்டும்.

பிரிவு.109:
இந்தப் பிரிவின் கீழ் சந்தேகப்படத்தக்க நபர்களிடமிருந்து ஒரு செயல் முறை நடுவர் நல்லடத்தைக்கான பிணையினை உரிய வழி முறைகளின் படி பெறலாம். யாரேனும் ஒரு நபர் அல்லது நபர்கள் குற்றம் புரிவதற்காக மறைந்திருப்பதாக தகவல் கிடைத்ததும், தன்னை மறைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டுள்ளார் என்று தெரியும் பொழுதோ பிரிவு ஐஐஐ -ன் கீழ் காரணம் கேட்கும் குறிப்பாணையை அனுப்பி பிணையுடன் அல்லது பிணையின்றி ஒரு கட்டுப்பாட்டு ஆவணத்தினை எழுதித்தரகோரலாம்.

பிரிவு.110:
இந்தப் பிரிவின் கீழ் வழக்கமாக குற்றங்களை புரிபவர்களிடமிருந்து நல்நடத்தைக்கான “பிணையினை” பெறலாம்.
கொள்ளையடிப்பதை, கள்ளக்கையொப்பம் இடுவது, வீடு புகுந்து களவாடுதலை வழக்கமாகக் கொண்டிருப்பவர் அல்லது களவாடப்பட்டவை என்று தெரிந்திருந்தும் திருட்டுச் சொத்தை பெற்றுக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டவர், திருடர்களுக்கு அல்லது திருட்டுப் பொருட்களுக்கு புகலிடம் அளிப்பவர்கள் ஆகியோர் மீது இப்பிரிவின் கீழ் நடவடிக்கை தொடரலாம்.

இந்திய தண்டனைச் சட்டம் 489-எ,489-பி,489-சி அல்லது 489-டி ஆகிய பிரிவுகளில் கூறப்பட்ட குற்றங்களை செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவரும், பதுக்கி வைத்தல், கள்ளச்சந்தையில் விற்றல், உணவு மற்றும் கலப்படம் செய்தல் ஆகிய குற்றங்களை செய்பவர்கள் மீது இப்பிரிவின் கீழ் நடவடிக்கை தொடரலாம்.

பிரிவு.129:
ஒரு சட்ட விரோதமான கூட்டத்தை அல்லது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய 5 அல்லது அதற்கு மேற்பட்டவர் சேர்ந்துள்ள கூட்டத்தை களைந்து செல்லுமாறு ஒரு செயல்முறை நடுவர் உத்தரவிடலாம். அவ்வாறு உத்தரவிடப்பட்டதும் கூட்டத்தில் இருப்பவர்கள் அனைவரும் கலைந்து செல்ல வேண்டியது அவர்களது கடமையாகும், கலையவில்லையெனில் கூட்டத்தை காவல் துறையினைரப் பயன்படுத்தி கலைப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளலாம். கலைந்து செல்லும் பொருட்டு அல்லது தண்டனைக்குள்ளாகும் பொருட்டு கைது செய்து காவலில் வைக்க உத்திரவிடலாம்.

பிரிவு:130:
சட்ட விரோதமான கூட்டம் களைக்க இயலாமல் போனால் பொது மக்களின் பாதுகாப்பு கருதி அங்குள்ள செயல்துறை நடுவர்களில் முதிர்ச்சி பெற்றவர் காவல்துறையினரின் உதவி கொண்டு கூட்டத்தை கலைக்க முற்படலாம். தேவைப்பட்டால், கூட்டத்தின் ஒரு பகுதியினை கைது செய்து காவலில் வைக்குமாறு உத்திரவிடலாம். கூட்டத்தை கலைப்பதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும் தேவைப்படும் குறைந்த அளவு பலத்தினை உபயோகப்படுத்தலாம்.

பிரிவு.133:
அ. ஒரு செயல்முறை நடுவர். பொதுவழி, ஆறு. கால்வாய் போன்ற இடங்களில் ஒழுங்கீனத்தை அகற்றுமாறும்.

ஆ. ஒரு குறிப்பிட்ட தொழிலை நடத்தக் கூடாது அல்லது அகற்ற வேண்டும் அல்லது ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும்.

இ. வெடி விபத்தை அல்லது நெரிசலை உண்டாக்குகின்ற கட்டிடம் கட்டுவதை நிறுத்தலோ அல்லது முறையை மாற்றுமாறும்.

ஈ. கட்டிடம் அல்லது அமைப்பை அகற்ற அல்லது பலப்படுத்துமாறும்

உ.கிணறு - அல்லது தோண்டப்பட்ட பள்ளம் ஆகியவற்றால் பொது மக்களுக்கு அபாயம் ஏற்படும்பொழுது வேலியிட்டு காக்குமாறும்.

ஊ.அபாயகரமான மிருகத்தினை அழிக்குமாறும் கேட்கலாம்

அவ்வாறு செய்வதற்கு மறுப்பு தெரிவித்தால், குறிப்பிட்ட நாளில் அந்த உத்திரவினை அமுல்படுத்திட ஏன் உறுதி செய்யக் கூடாது என்பதற்கான காரணத்தினைக் கோரலாம்.

பிரிவு.134:
இது போன்ற நிலைமைகளில் அழைப்பாணைகளை வழிமுறைகளின் படி துல்லியமாக சார்வு செய்ய வேண்டும்.

பிரிவு.135:
அழைப்பாணைக்குரிய நபர், அழைப்பானையினைப் பெற்றுக்கொண்டு உத்திரவின்படி வருகை தந்து அதற்கெதிரான காரணங்களை காட்ட வேண்டும்.

பிரிவு.136:
உத்திரவிற்கு பணிய மறுத்தாலும், வருகை தந்து மறுப்பினைக் கூறாவிட்டாலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 188-வது பிரிவின்படி தண்டிக்கப்படுவார்.

பிரிவு.137:
பொதுவழி, ஆறு, கால்வாய் போன்றவற்றில் தனி நபர் ஒருவர் பொது உரிமையினை மறுக்கின்றபொழுது செயல்துறை நடுவர் 138-வது பிரிவில் கூறியுள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

பிரிவு.138:
காரணம் கேட்கும் நடவடிக்கையினை தொடரும் பொழுது ஒரு செயல்முறை நடுவர் வழக்குகளுக்கு உரிய முறைப்படி சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும்.

பிரிவு.139:
பொது உரிமை மறுக்கப்படும் இனங்களில் செயல்முறை நடுவர் தகுதியானவர் என தான் கருதும் இடத்தைப் பார்வையிட்டு அறிக்கை செய்யக் கோரலாம் அல்லது சம்பந்தப்பட்ட நிபுணர் கருத்தைக் கேட்டறியலாம்.

பிரிவு.140:
இடத்தை ஆய்வு செய்ய பணிக்கப்பட்டவருக்கு வழிகாட்டியாக எழுத்து மூலமான ஆய்வுரைகள் வழங்கப்பட வேண்டும். இதுபோன்ற இனங்களில் ஏற்படும் செலவினங்களை யார் ஏற்றுக்கொள்வது என்பது பற்றி தெளிவான முடிவுகள் கூறப்பட வேண்டும்.

பிரிவு.141:
செயல்துறை நடுவரின் முடிவினை சம்பந்தப்பட்ட நபருக்கு அறிவிக்க வேண்டும்;. முடிவை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவேற்றுமாறும் கூறப்பட வேண்டும். தவறினால் இந்திய தண்டனைச் சட்டம் 188-வது பிரிவின் படி தண்டனைக்குள்ளாவார் என்றும் தெளிவாக்கப்பட வேண்டும். இந்தப் பிரிவின் படி நல்லெண்ணத்தின் அடிப்படையில் செய்யும் எந்தக் காரியத்திற்காகவும் எந்த உரிமையியல் வழக்கும் தொடர முடியாது.

பிரிவு:142:
பிரிவு 133ன் படி உத்திரவிடக்கூடிய ஒரு செயல்முறை நடுவர் பிரச்சனை முடிவதற்கு முன்பாக பொதுமக்களுக்கு நேரக்கூடிய தீங்கினை முறியடிக்க வேண்டுமெனக் கருதினால் இடைக்காலத் தடை உத்திரவை சம்பந்தப்பட்ட நபருக்கு விடுக்கலாம் இப்பிரிவின் கீழ் எடுக்கும் நடவடிக்கைக்காக செயல்முறை நடுவர் மீது எந்த உரிமையியல் வழக்கும் தொடர முடியாது.

பிரிவு.143:
இப்பிரிவின்படி ஒரு மாவட்ட அல்லது கோட்ட செயல்துறை நடுவர் இந்தியத் தண்டனைச்சட்டத்தின்படி அல்லது வட்டார சட்டத்தின்படி பொது ஒழுங்கீனம் என்று கருதப்படும் எதனையும் செய்யக்கூடாது என்று உத்திரவிடலாம்.

பிரிவு.144:
1.இப்பிரிவின் மூலம் ஒரு மாவட்ட / கோட்ட/ வட்ட செயல்முறை நடுவர்கள் பொது அமைதியைக் காக்க, கலவரத்தைத் தடுக்க மனித உயிர்பாதுகாப்புக்கு ஏற்படக் கூடிய அபாயத்தைத் தடுக்க,சுகாதாரம் அல்லது சட்டப்படி பணியாற்றும் ஒருவருக்குத் தீங்கு,தொல்லை, தடை ஏற்படாமல் தடுப்பதற்கும் இந்த உத்திரவை பிரகடனம் செய்யலாம். மேலும் 134- வது பிரிவின்படி, எந்த ஒரு நபரையும் ஒரு குறிப்பிட்ட செயலை செய்யாதிருக்கும்படியும் அல்லது அவருக்குச் சொந்தமான அல்லது ஆளுகையில் உள்ள ஒரு சொத்தினைப் பற்றி ஒரு குறிப்பிட்ட உத்திரவினை ஏற்றும்படி செய்யலாம்.

2. நெருக்கடியான நேரங்களில் சார்பு செய்ய இயலாத கூழ்நிலைகளில் ஒருதலைப்பட்சமாக இந்த உத்திரவினைப் பிறப்பிக்கலாம்.

3.இப்பிரிவின்படியான உத்திரவினை ஒரு குறிப்பிட்ட நபருக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது பகுதியில் வசிக்கும் நபர்களுக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு வருகைத் தரக்கூடிய அல்லது வரக் கூடிய பொது மக்கள் அனைவருக்கும் பிறப்பிக்கலாம்.

4. இப்பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட எந்த உத்திரவும் பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து இரண்டு மாதங்களுக்கு மேல் அமுலில் இருக்கக்கூடாது. ஆனால் மனித உயிருக்கும் பாதுகாப்பிற்கும் பங்கம் ஏற்படுவது தவிர்க்கவும், கலவரத்தைத் தடுக்கவும் அவசியம் என மாநில அரசு கருதினால் அந்த செயல்முறை நடுவரால் பிறப்பிக்கப்பட்ட உத்திரவை ஓர் அறிக்கையின் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீட்டித்து அமுலில் இருக்குமெனக் கூறலாம். அவ்வாறு நீட்டித்து அமுலில் இருக்கும் மொத்த கால எல்லை ஆறு மாதங்களுக்கு மேற்படக் கூடாது.

5) இப்பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட எந்த உத்திரவினை அவரோ அல்லது அவரின் பின்னவர் அல்லது பாதிக்கப்பட்டவரின் மனுவினை ஏற்று ரத்து செய்யலாம் அல்லது மாற்றி அமைக்கலாம்.

பிரிவு.145:
1. நமது அதிகார எல்லைக்குள் ஒரு நிலம் அல்லது தண்ணீர் அலலது அதன் எல்லைகள் பற்றிய பிரச்சனை பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கப்படும் என்ற செய்தியை காவல் அலுவலர் மூலம் பெற்ற ஒரு செயல்முறை நடுவர் காரணங்களை எழுத்தால் வடித்து ஒரு குறிப்பிட்ட நாளில் இரு தரப்பினரையும் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து தானாகச் சொத்து பற்றிய விபரத்தை கூறுமாறு பணிக்கலாம்.

2.இந்தப் பிரிவின்படி நிலம், நீர் கட்டிடங்கள், சந்தைக் கடைகள் பயிர் அல்லது வேறு விளைச்சல்கள், மீன்பிடி துறைகள் அதன் மூலம் பெறக்கூடிய இலாபங்களையும் குறிக்கும்.

3. இப்பிரிவின் கீழான அழைப்பாணையை சட்டத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின்படி சார்வு செய்ய வேண்டும்.

4. விசாரணையின் போது செயல்முறை நடுவர் இரு தரப்பினரின் தகுதி உரிமைகள் ஆகியவற்றைப் பற்றி கவலைப்படாது. பிரச்சினைக்குரிய சொத்து யாருடைய வசத்திலாளது இருந்ததா அல்லது எவருடைய வசத்தில் இருந்தது என்பது பற்றி முடி வெடுக்க வேண்டும். ஆனால் காவலர் அறிக்கை செயல்துறை நடுவருக்கு கிடைத்த பின்னர் வன்முறையாகவோ, சட்ட விரோதமாகவோ அந்த சொத்து பறிக்கப்பட்டது என்று தோன்றும்பொழுது பறிகொடுத்தவரை ஆளுகைக்குரியவராக உத்திரவு பிறப்பிக்கலாம்.

5.சட்டப்படி நிலத்தினுடைய உரிமையாளர் உத்திரவு மற்றவரை வெளியேற்றும் வரையில் வெளியேற்றத்திற்குரியவர். அவ்வாறு வெளியேற்றப்படும் வரை எவ்வித இடையூறும் இல்லாமல் அவரின் வசத்தில் தொடர்ந்து வைத்துக் கொள்ள செயல்துறை நடுவர் அறிவிக்க வேண்டும்.

நடவடிக்கைக்குரிய உறுப்பினரில், ஒருவர் மரணம் அடைந்தால் அந்த நடுவர் இறந்தவரின் சட்டப்பூர்வமான வாரிசை ஒரு தரப்பாக சேர்த்துக் கொண்டு விசாரணையை தொடர்ந்து நடத்த வேண்டும்.

இப்பிரிவின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட சொத்து அழியும் தன்மை உடையவனவாக இருந்தால், அப்பொருளை விற்று முதலாக்க உத்திரவிடலாம். விசாரணை முடிவுற்ற பின்னர் விற்பனை முதலை என்ன செய்வது என்பது பற்றி செயல்துறை நடுவர் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.

பிரிவு.146:
1.பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய பிரச்சனைக்குரிய சொத்து யாருடைய ஆளுகையின் கீழ் இருந்தது என்பது பற்றி செயல்துறை நடுவரால் நிர்ணயிக்க முடியாத நிலையில் தகுதி வாய்ந்த நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை செயல்துறை நடுவர் அச்சொத்தினை கைப்பற்றலாம்.

2.பிரச்சனைக்குரிய சொத்திற்கு உரிமையியல் நீதிமன்றம் ஏற்புனர் (Receiver) நியமிக்காதபொழுது செயல்முறை நடுவரே ஒரு “ஏற்புனரை” நியமிக்கலாம். அவர் உரிமையியல் சட்டத்தின்படி அனைத்து அதிகாரங்களையும் பெற்றிருப்பார். உரிமையியல் நீதிமன்றம் ஒர் ஏற்புனரை பிற்பாடு நியமித்தால் தம்மால் நியமனம் செய்யப்பட்ட ஏற்புனரை நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட ஏற்புனரிடம் சொத்துக்களை ஒப்படைக்க ஆணையிட வேண்டும்.

பிரிவு.174:
ஒருவர் தற்கொலை செய்து கொண்டது (அல்லது) மற்றொருவரால் (அல்லது) ஒரு மிருகத்தால், இயந்திரத்தினால் அல்லது விபத்தினால் மரணமுற்றோர் அல்லது குற்றம் நடத்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கத்தக்க சூழ்நிலையில் மரணமுற்றார் என்ற தகவல் காவல்துறை மூலம் கிடைக்கப்பெற்றதும் ஒரு செயல்துறை நடுவர் மாணடவரின் உடல் உள்ள இடத்திற்கு செல்ல வேண்டும். அருகாமையில் உள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய மனிதர்கள் முன்னிலையில் விசாரணை செய்து இறப்புக்குரிய காரணத்தை உத்தேசமாக கணிக்க வேண்டும். பிரேதத்தின் மேல் காணும் காயங்கள், எலும்பு முறிவுகள், சிராய்ப்புகள் மற்ற அடையாளங்களைக் குறித்துக் கொள்ள வேண்டும். எப்படி அல்லது எந்த ஆயுதத்தால் அவை ஏற்பட்டிருக்கக் கூடும் என்பதனையும் குறித்துக் கொள்ள வேண்டும்.

செயல்முறை நடுவர் பிரேத விசாரணை நடத்துவதற்கு அதிகாரம் பெற்றவர்.

குற்றவியல் நீதித்துறை பயிற்சி பெறுவோருக்கு ஒர் அறிமுகம் பயன்படும் சட்ட நூல்கள்:

1.இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code)1860
1 முதல் 511 பிரிவுகள் கொண்டது. குற்றம் மற்றும் வழங்கப்பட வேண்டிய தண்டனை குறித்தது.

2.குற்ற விசாரணை முறைச் சட்டம் (Criminal Procedure Code) 1973
1 முதல் 484 பிரிவுகள் கொண்டது. குற்றவியல் நீதி மன்றங்களில் கடைபிடிக்கப்படும் வழிமுறைகள் குறித்தும், எதிரி சாட்சி நடத்தை விதி குறித்தும், அரசு தரப்பு வழக்கறிஞர், எதிரி தரப்பு வழக்கறிஞர்களின் செயல்பாடு குறித்தும், வழக்குகளின் தன்மைக்கு ஏற்ப அதனை வகைப்படுத்தியும் வழி காட்டுகிறது.

3. இந்திய சாட்சியச் சட்டம் (Indian Evidence Act) 1872

1 முதல் 167 பிரிவுகள் கொண்டது உரிமையியல் நீதி மன்றம் மற்றும் குற்றவியல் நீதி மன்றங்களில் கொண்டு வரப்படும் சாட்சிகள் குறித்தும், அவர்களிடம் விசாரணை செய்து சாட்சியம் பதிவு செய்வது குறித்து

4.குற்றவியல் நீதி மன்றத்தில் உள்ள வழக்குகளின் பாகுபாடு

பிடி ஆணை வழக்கு
(Warrant Cases)
மரணம், ஆயுள் தண்டனை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைக்காவல் தண்டனையாக விதிக்கத்தக்க குற்றம் பற்றிய வழக்காகும்.
அழைப்பாணை வழக்கு
(Summon Cases)
பிடி ஆணை வழக்கு அல்லாத ஒரு வழக்கைப் பற்றியதாகும்.
சுருக்கமான விசாரணை வழக்குகள்
(Summary Trial Cases)
அபராதம் மட்டும் விதிக்கத் தக்க அல்லது அபராதத்துடன் அல்லது அபராதம் இன்றி 6 மாதங்களுக்கு மேற்படாத சிறைத் தண்டனை விதிக்கத்தக்க குற்றங்கள், விசாரணை வழக்குகள்.
ஆண்டு பட்டியல் வழக்கு
(Calendar Cases)
மேலே சொன்ன குற்றங்களுக்கு மேற்பட்டும் ஆனால் 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு மேற்படாத குற்றங்கள் விசாரணை வழக்குகள்.

சிறப்பு நீதித்துறை நடுவரின் அதிகார வரம்பிற்குள் உட்படும்

வ.எண்
பிரிவு எண்
குற்றம்
தண்டனை
1.
279
பொது பாதையில் முரட்டு தனமாகவும் அசட்டையாகவும் சவாரி செய்தல் 6 மாதம் சிறை (அல்லது)ரூ.1000 அபராதம் (அல்லது) இவ்விரண்டும்
2.
294
(b)
ஆபாசமாக திட்டுவது, அசிங்கமான வார்த்தைகளை பிரயோகிப்பது 3 மாதம் சிறை (அல்லது) அபராதம் (அல்லது) இவ்விரண்டும்
3.
323
வலிந்து காயம் உண்டாக்குதல் 1 ஆண்டு சிறை (அல்லது) ரு.1000 அபராதம் (அல்லது) இவ்விரண்டும்
4.
324
ஆபாயகரமான ஆயுதம் கொண்டு வலிந்து காயம் உண்டாக்குதல் 3 ஆண்டு சிறை (அல்லது) அபராதம் (அல்லது) இவ்விரண்டும்
5.
334
திடீரென ஆத்திரமூட்டப்பட்டதன் பேரில் வலிந்து தாக்கி காயம் ஏற்படுத்தியது 1 மாதம் சிறை (அல்லது) ரூ.500 அபராதம் (அல்லது) இவ்விரண்டும்
6.
337
முனித உயிருக்கு ஊறுசெய்யக் கூடிய செயலால் காயம் விளைவித்தல் 6 மாதம் சிறை (அல்லது)ரூ.500 அபராதம் (அல்லது) இவ்விரண்டும்
7.
338
முனித உயிருக்கு ஊறுசெய்யக் கூடிய செயலால் கொடுங்காயம் விளைவித்தல் 2 ஆண்டு சிறை (அல்லது) ரூ.1000 அபராதம் (அல்லது) இவ்விரண்டும்
8.
341
எந்த நபரையும், சட்ட விரோதமாக தடுத்தல் 1 மாதம் சிறை(அல்லது) ரூ.500 அபராதம் (அல்லது) இவ்விரண்டும்
9.
342
சட்ட விரோதமாக எந்த நபரையும் சிறைவைத்தல் 1 ஆண்டு சிறை (அல்லது) ரூ.1000 அபராதம் (அல்லது) இவ்விரண்டும்
10.
352
கடுமையாக ஆத்திரம் ஏற்படுத்தாமலேயே தாக்குதல் அல்லது குற்ற வன்முறை பயன்படுத்துதல் 3 மாதம் சிறை(அல்லது) ரூ.500 அபராதம் (அல்லது) இவ்விரண்டும்
11.
353
354
355
356
தீய நோக்கத்துடன் தாக்குதல் வன்முறையை பயன்படுத்தல் 2 ஆண்டு சிறை (அல்லது) அபராதம் (அல்லது) இவ்விரண்டும்
12.
357
சிறை வைக்க முயன்று தாக்குதல் 1 ஆண்டு சிறை (அல்லது) ரூ.1000 அபராதம் (அல்லது) இவ்விரண்டும்
13.
358
கடுமையாக ஆத்திரமூட்டியதால் தாக்கியது (அ) வன்முறையை பயன்படுத்தியது 1 மாதம் சிறை (அல்லது)ரூ.200 அபராதம் (அல்லது) இவ்விரண்டும்
14.
379
திருடுதல் 3 ஆண்டு சிறை (அல்லது) அபராதம் (அல்லது) இவ்விரண்டும்
15.
434
அரசு அலுவலரால் அமைக்கப்பட்ட நில அடையாளத்தை மாற்றி அமைத்தல் அல்லது அழித்தல் 1 ஆண்டு சிறை (அல்லது) அபராதம் (அல்லது) இவ்விரண்டும்
16.
506
(1)
குற்றம் கருதி மிரட்டுதல் 2 ஆண்டு சிறை (அல்லது) அபராதம் (அல்லது) இவ்விரண்டும்
17.
509
மங்கையின் பண்புக்கு பங்கம் விளைவிக்க கூடிய வகையில் செய்கை அல்லது சொல் பயன்படுத்துவது 1 ஆண்டு சிறை (அல்லது) அபராதம் (அல்லது)இவ்விரண்டும்

சிறப்பு நீதித்துறை நடுவர் மன்றத்தில் பயன்படும்
குற்ற விசாரணை முறைச் சட்டப்பிரிவுகள்

பிரிவு
விளக்கம்
13
சிறப்பு நீதித்துறை நடுவர் நியமனம் மற்றும் அதிகாரம்
25
அரசு உதவி குற்றத்துறை வழக்கறிஞர் நிலை.2/நிலை.1 நியமனம்- கடமை
61
ஆழைப்பாணை
66
அரசு ஊழியரிடம் அழைப்பாணை சார்வ் செய்தல்
70
பிடி ஆணை
154
முதல் தகவல் அறிக்கை
161
சாட்சிகளை விசாரித்தல்
170/173
நீதி மன்றத்திற்கு குற்றப்பத்திரிக்கை அனுப்புவது.
(புலனாய்வு முடித்த பின்னர்)
174
சந்தேக மரணம் - விசாரணை
206
சிறப்பான அழைப்பாணை (சிறு குற்றத்திற்கு)
207
எதிரிக்கு கொடுக்க வேண்டிய ஆவணம்
251
அழைப்பாணை வழக்குகள்
252
எதிரி குற்றத்தை ஒத்துக்கொள்வது
255
விடுதலை அல்லது தண்டனை
263
சுருக்க விசாரணை கோப்புகள்
273
எதிரியின் முன்னிலையில் சாட்சியம் பதிவு செய்தல்
281
எதிரியை விசாரித்தல்
291
மருத்துவ அலுவலர் சாட்சியம்
313
எதிரியை விசாரித்தல்
314
வாதுரைகள்
317
எதிரியில்லாமல் விசாரிப்பது
320
சமாதானம் செய்யக் கூடிய குற்றங்கள்
சிறப்பு நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் பயன்படும் இந்திய சாட்சிய சட்டப்பிரிவுகள்
59
60
வாய்மொழி சாட்சியம் பற்றியது
61
62
ஆவணச் சட்டம் பற்றியது
74
பொது ஆவணம்
75
தனியார் ஆவணம்
135
சாட்சிகளை விசாரிப்பது
137
138
முதல் விசாரணை
குறுக்கு விசாரணை
மறு விசாரணை
141
விடை பொதி வினா

 

 

வருவாய் ஆய்வாளர்
கிராம நிர்வாக அலுவலர்
மண்டலதுணை வட்டாட்சியர்
வட்டாட்சியர்
வருவாய் கோட்டாட்சியர்
கிராம கணக்குகள்
வட்ட கணக்குகள்
பயிராய்வு
ஆக்ரமணம்
பட்டா மாறுதல்
வீட்டுமனை மற்றும் நில ஒப்படை
நில எடுப்பு
நிலமாற்றம் / நில உரிமை மாற்றம்
நில குத்தகை
அரசால் வாங்கப்படும் நிலங்கள் / நில பரிவர்த்தனை
நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகார வரம்பு
தடையாணை புத்தகம் / நகல் மனுக்கள்
மரங்கள் வனக்குற்றங்கள்
சான்றுகள்
வருவாய் வசூல் சட்டம்
வறியவர் வழக்கு
முதியோர் உதவித்தொகை திட்டம்
நலிந்தோர் குடும்ப நல திட்டம்
விபத்து நிவாரண திட்டம்
புதையல்
படைக்கலச்சட்டம்
வருவாய்த்துறை தொடர்புடைய குற்ற விசாரணை முறை சட்டம்