மரங்கள்

    அரசு நிலங்களில் உள்ள மரங்கள் அரசின் சொத்தாகும். இது கிராம கணக்கு நடைமுறை நூலில் சொல்லப்பட்டிருக்கிறபடி 2சி கணக்காகப் பராமரிக்கப்படுகிறது. ஊராட்சிக்கு ஒப்படை செய்யப்பட்ட நிலங்களில் உள்ள மரங்கள் ஊராட்சியை சார்ந்ததாகும். அரசு நிலங்களில் உள்ள குறிப்பிட்ட மரங்களுக்கு அண்மை நிலத்து சொந்தக்காரர் அல்லது மற்றவர்களுக்கு அனுபோக உரிமை கொடுப்பதே “2சி மரப்பட்டா” ஆகும் மரம் அரசுக்கு சொந்தமானது மேம்பலன் மட்டும் அதாவது மேற்படி மரங்களில் கிடைக்கும் பழம், காய் இலை போன்ற மகசூலை மட்டுமே பட்டாதாரர் அனுபவித்துக் கொள்ளலாம், விலைமதிப்புடைய மரங்களுக்கு மரப்பட்டா வழங்கக் கூடாது. 2சி மரவரி வசூல் முழுவதும் 1385ம் பசலி முதல் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி கணக்கில் செலுத்தப்பட வேண்டும். (அரசாணை எண்.351 வருவாய்த்துறை நாள்:22.2.82) நகராட்சி எல்லைக்குட்பட்ட 2சி மரவரி வசூல் தொகை நகராட்சி கணக்குக்கு சரி கட்ட தேவையில்லை. நேரடியாக அரசு கணக்கில் செலுத்திவிடலாம். இந்த அறிவுரைகள் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட மரங்களுக்கும் பொருந்தும் இந்த மரங்களுக்கு அரசு பாசன ஆதாரங்களின் மூலம் பாசனம் பெற்றால் தண்ணீர் தீர்வையும் விதிக்கப்பட வேண்டும்.

மரங்களை ஏலத்தில் விற்பனை செய்தல்:

அரசு புறம்போக்குகளில் உள்ள மரங்கள் கீழ்கண்ட சூழ்நிலைகளில் விற்பனை செய்திடலாம்.

1) அரசு நிலங்களிலுள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவது தேவையென்று கருதும் நிலையிலும்

2) நில ஒப்படை பெற விண்ணப்பம் செய்திருப்பவர் நிலத்திலுள்ள மரத்தின் கிரயத்தை செலுத்த முடியாமலோ, செலுத்த விரும்பாத நிலை ஏற்படின் வருவாய் நிலை ஆணை 15 பிரிவு 14ன்கீழ் தனியாக விற்பனை செய்ய தீர்;மானிக்கும் நிலையிலும்.

3) காற்றில் விழுந்து விட்ட அல்லது பட்டுப்போன மரங்களை விற்பனை செய்ய நேரிடும் நிலையிலும் அரசினர் மரங்களை விற்பனை செய்திடலாம்.

   ஏல விற்பனை செய்ய ஆணை பிறப்பிப்பதற்கு முன்னர் மரங்களின் மதிப்பீடு நிர்ணயிக்கப்பட வேண்டும். தேவையெனில் வனத்துறையினரின் கருத்தறியலாம். மரமதிப்பு நிர்ணயம் செய்து முடித்தபின் வருவாய் நிலை ஆணை எண் 18 அ(3) ல் கண்ட விற்பனை படிவம் 11 (அ) ல் அறிக்கை வெளியிட வேண்டும். மரமதிப்பு ரூ.500/-க்கு மேல் ரூ.10,000/-க்குள் வருமானால் மாவட்ட அரசிதழில் விளம்பரம் செய்ய வேண்டும். மதிப்பு ரூ.10,000/-க்கு மேல் வருமென்று கருதினால், அரசிதழில் விளம்பரம் மட்டுமின்றி ஒரு தமிழ் தினசரி செய்திதாளில் தொடர்ந்து இருநாட்களுக்கு விளம்பரம் செய்திட வேண்டும். ரூ.1000/-வரை உள்ள மர ஏலத்தை வட்டாட்சியரும், ரூ.1000/-க்கு மேல் ரூ.5000/-வரை கோட்டாட்சியரும், ரூ.5000/-க்கு மேல் மாவட்ட ஆட்சியரும் ஏலத்தினை உறுதி செய்திடலாம்.

   ஊராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட நிலங்களில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் சாலையோரங்களில் நிற்கும் உயிருள்ள மரங்கள் குடிநீர் ஊரணிகளில் குடிநீருக்கு கேடு விளைவிக்கும் வகையில் உள்ள மரங்கள் ஆகியவற்றை வட்டாட்சியரின் இடப் பார்வைக்குபின் வருவாய் கோட்டாட்சியரின் அனுமதியின் பேரில் வெட்டி ஏலம்விட ஊராட்சிக்கு உரிமை உண்டு. புயலால் விழுந்த மரங்களைப் பொறுத்து வருவாய் கோட்டாட்சியரின் முன் அனுமதி பெற்று ஊராட்சி ஏலம் விடலாம். ஆனால் வெட்டப்படும் மரங்களுக்கு சமமான மரங்களை ஊராட்சி செலவிலேயே ஓராண்டிற்குள்ளாக புதிதாக பயிரிட வேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே அனுமதி வழங்கப்பட வேண்டும்.

(அரசாணை பல்வகை எண்.351 வருவாய்த்துறை நாள்:22.2.82)

அனுமதியற்ற மரவெட்டு:

கிராம நிர்வாக அலுவலர்களும், கிராம உதவியாளர்களுமே அரசு மரங்களின் பாதுகாவலர்கள். அனுமதியற்ற மரவெட்டிற்கு கிராம நிர்வாக அலுவலர்களே முழு பொறுப்பாளியாவார்கள்.
மரவெட்டு நடந்த 24 மணி நேரத்திற்குள் சம்பவம் தொடர்பான அறிக்கையினை வருவாய் ஆய்வர் “ஏ” படிவத்தில் வட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மரம் கைப்பற்றப்பட்டிருந்தால் அதன் விவரத்தினை படிவம் “எச்”ல் மாஜிஸ்ட்ரேட்டுக்கு தெரிவிக்க வேண்டுமு;. கைப்பற்றப்பட்ட மரத்தினை கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைத்து அதற்கான அத்தாட்சியை படிவம் “ஐ”ல் அவரிடமிருந்து பெற வேண்டுமு; மரவெட்டு ஒப்புக் கொள்ளப்பட்ட இனத்தில் “சி” படிவத்தில் நோட்டீசை வட்டாட்சியர் குற்றவாளிக்கு அனுப்பி வைப்பார்.கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் “சி”படிவ நோட்டீஸின் மூன்றாவது நகலுடன் “ஏ” படிவ அறிக்கை நகலையும் இணைத்து சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை மாஜிஸ்ட்ரேட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். காம்பவுண்டிங் ஆணை படிவம் “ஜி”ல் பிறப்பிக்கப்பட்டு குற்றவாளிக்கு சர்வு செய்யப்படும். காம்பவுண்டிங் செய்வதற்குரிய மர மதிப்பு நிர்ணய பார்முலா பின் வருமாறு:
ஜி2 ஒ 7 எச் ஸ்ரீ எம் 3
88
ஜி - சுற்றளவு எச் - உயரம் எம் - கன அளவு

   காம்பவுண்டிங் தொகையை வசூலித்துக் கொண்டு கைப்பற்றிய மரத்தை பறிமுதல் செய்து ஏலத்தில் விடலாம். அல்லது காம்பவுண்டிங் தொகையையும் மர மதிப்பையும் வசூலித்துக் கொண்டு மரத்தை குற்றவாளியிடமே கொடுத்து விடலாம். இது குறித்து ஆணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். மரத்தை திருப்பிக் கொடுக்கும் பட்சத்தில் மேற்படி ஆணையில் ராசித் தொகையுடன் மர மதிப்பும் சேர்ந்துள்ளது (மொத்த மரமதிப்பைப் போல் குறைந்தது இருமடங்கு இருத்தல் வேண்டும்) என்று தெளிவாகக் குறிப்பிட வேண்டும். பறிமுதல் செய்வது என்றால் ராசி தொகையில் மர மதிப்பு சேரவில்லை என்று குறிப்பிட வேண்டும். காம்பவுண்டிங் செய்ய வட்டாட்சியருக்கு அதிகாரம் உள்ளது. ரூ.500/-க்கு மேல் ராசி செய்து கொள்ள வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரமுள்ளது. மேற்படி காம்பவுண்டிங் ஆணைகளை எதிர்த்து மேல் முறையீடு செய்ய விதிகளில் இடமில்லை. (அரசாணை எண் 461 வருவாய்த்துறை நாள்:23.3.87)

மரங்களின் சீனியரேஜ் மதிப்புகள்:

1. முதல் வகுப்பு (ஒரு க்யூபிக் மீட்டருக்கு (எம்3) ரூ.400)
இதில் அடங்கும் மரங்கள் : 1) கருவாகை 2)கருப்பு குங்கிலியம் 3)பூவரசு 4)சிரு 5)வேம்பு 6) கருமருதை 7)மார்லி 8) அகில் அல்லது தேவகொன்னை 9)சடாட்சி

2.இரண்டாம் வகுப்பு (ஒரு க்யூபிக் மீட்டருக்கு ரூ.200)
இதில் அடங்கும் மரங்கள்: 1)கருவேலம் 2)கருங்காலி 3)காட்டு வாகை 4)மஞ்சக் கடம்பை 5) நாமை 6)நாகை 7)பலா 8)வெள்ளை மருதை 9)மல்லாடி 10) கள்ளியாச்சா 11) பிள்ளைமருது 12) உசிலை 13) வெல்வேலம் 14) புளி 15) மா 16) இலுப்பை

3.)மூன்றாம் வகுப்பு (ஒரு க்யூபிக் மீட்டருக்கு ரூ.100)
இதில் அடங்கும் மரங்கள்: 1) கொன்னை 2) புங்கம்

இதரமரங்கள்:
பனை - ரூ.105/- ஒரு மரம்
தென்னை - ரூ.90/- ஒரு மரம்
விறகு - ரூ.45/- ஒரு மெட்ரிக்டன்
அடுப்புக்கரி - ரூ.40/- ஒரு மெட்ரிக்டன்
(அரசாணை பல்வகை எண் 993 வன மற்றும் மீனதுறை நாள்: 10.10.85)

 

வருவாய் ஆய்வாளர்
கிராம நிர்வாக அலுவலர்
மண்டலதுணை வட்டாட்சியர்
வட்டாட்சியர்
வருவாய் கோட்டாட்சியர்
கிராம கணக்குகள்
வட்ட கணக்குகள்
பயிராய்வு
ஆக்ரமணம்
பட்டா மாறுதல்
வீட்டுமனை மற்றும் நில ஒப்படை
நில எடுப்பு
நிலமாற்றம் / நில உரிமை மாற்றம்
நில குத்தகை
அரசால் வாங்கப்படும் நிலங்கள் / நில பரிவர்த்தனை
நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகார வரம்பு
தடையாணை புத்தகம் / நகல் மனுக்கள்
மரங்கள் வனக்குற்றங்கள்
சான்றுகள்
வருவாய் வசூல் சட்டம்
வறியவர் வழக்கு
முதியோர் உதவித்தொகை திட்டம்
நலிந்தோர் குடும்ப நல திட்டம்
விபத்து நிவாரண திட்டம்
புதையல்
படைக்கலச்சட்டம்
வருவாய்த்துறை தொடர்புடைய குற்ற விசாரணை முறை சட்டம்